உண்மைக்காய் எழுவோம்
Event Category: Eelam
-
தமிழ்மக்களின் ஆணையை ஏற்று சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இறைமையுள்ள தமிழீழத்திற்காய் போராடி தமிழீழ நடைமுறை அரசை நடாத்திய எமது ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக சித்தரிக்க முனைவதை கண்டித்தும்…
தமிழ்மக்களுக்காய் சுவிசில் பணிசெய்த எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்களையும், அதற்காக பங்களித்தவர்களையும் குற்றவியலாளர்களாக சட்டரீதியாக தண்டிக்க முனைவதை கண்டித்தும்…
“உண்மைக்காய் எழுவோம்”
24.02.2018, சனிக்கிழமை பி.ப 14:00 மணி
சுவிஸ் பாராளுமன்ற முன்றலில்..சுவிசில் உள்ள கல்வி நிறுவனங்கள், இசை/நடன பள்ளிகள், ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் தமிழர் நிறுவனங்களோடு; அனைத்து தமிழ் பேசும் மக்களும் எம்மினத்தின் வாழ்விற்கும், இருப்புக்குமான இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து பேராதரவு நல்கி, தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
வீரத்தமிழினமே, சிந்திப்பீர்! செயற்படுவீர்! அணிதிரள்வோம் வாருங்கள்..!
-
-