•  

    International Institute of Tamil Arts

      சுவிற்சர்லாந்து நாட்டில் தாய்மொழிக்கல்வியுடன் கலை வகுப்புக்களையும் முன்னெடுத்துவந்த தமிழ்க்கல்விச்சேவை 1997ம் ஆண்டு முதல் நுண்கலைத் தேர்வுகளையும் நடாத்தியது. இத்தேர்வில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இத்தேர்வினைத் தொடர்ந்து மேலும் சிறப்பாகவும், ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலும் நடத்த வேண்டிய தேவை உணரப்பட்டது. இதனடிப்படையில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐரோப்பாவில் இயங்கிவந்த அதிகளவு கலை ஆசிரியர்களின் ஆதரவுடன் பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பெற்றது. சுவிற்சர்லாந்து நாட்டு சட்டவரைமுறைகளுக்கமைய பதிவு செய்யப் பெற்று இந்நிறுவகம் இயங்கிவருகிறது. இவ் அமைப்பானது ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழ் மாணவர்களுக்கென இலகுவானமுறையில் பாடத்திட்டத்தினைத் தயாரித்து வெளியிட்டது. இப்பாடத்திட்டமானது கலை ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு தாயகம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல கலைத்துறை வித்தகர்களின் கருத்துக்களுடன் முழுமைப்படுத்தப்பட்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், பொதுவான தேர்வு விதிமுறைகளுக்கு அமைவாக 2002ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் கலைத் தேர்வுகளுக்கு யேர்மனி, பிரான்ஸ், Read more [...]

  •  

    Munaippu

    நோக்கம்: இலங்கையின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சமுக ஆர்வலர்களால்  2010.02.07 அன்று ஆரம்பிக்கப்பட்டதே முனைப்பு நிறுவனமாகும் அங்கத்துவம்: சுவிஸ் நாட்டில் வாழும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தமக்கள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர் நிதிபெறும்வழிகள்: அங்கத்துவ சந்தா, சுவிஸ் மக்களின் அன்பளிப்பு, கதம்பமாலை நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி. கதம்பமாலை: இங்கு வாழும் நமது பிரதேச மக்களை ஒன்றினைத்து வருடாந்தம் நடாத்தப்படும் நிகழ்வாகும் இதில் நம்மவர்களின் நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் , இந்நிகழ்வுக்கு இந்நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு வழங்குகின்றனர். இதன் மூலம் பெறப்படும் நிதி நம்மவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பெரும் உதவியாக உள்ளது. தற்போதையசெயற்திட்டங்கள்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் நிதி வழங்குதல். பெற்றோரை இழந்து உறவினர்களுடன் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த நிதி உதவி வழங்கல். மாதம் ஒரு விதவைக்கு Read more [...]